கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பாலமுனைக் கிரமத்தில், கடற்கரையை மிக அண்மித்த பகுதியில் ரம்மியமான சூழலிலே கமு/அக்/அல் ஹிக்மா வித்தியாலயம் அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப கால தொடக்கம் இதுவரை எமது சமூகத்திற்கு தேவையான முன்மாதிரியான ஆளுமைமிக்க மனித வளங்களை உருவாக்குவதில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலேயே ஒரு முன்னணிப் பாடசாலையாக இது திகழ்கின்றது.
சமூகம் அங்கீகரிக்கும் விழுமியங்களையும் நடத்தைகளையும் கொண்ட உயர் தரத்திலான மனித வள விருத்தி
தரமான கல்வி மூலம் நவீன சவால்களை வெற்றி கொள்ளத்தக்க சமநிலை ஆளுமையும் தன்னம்பிக்கையும் உடல். உள அனுபவங்களையும் கொண்ட மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தல்.