கையேந்திக்கேட்குகின்றோம்
கருணை மிகு இறையோனே
எந் நாளும் எம் கல்வி
ஏற்றம் பெற நீ அருள்வாய்
கள்ளம் இல்லா எம் மனதில்
கல்வி அலை தான் புரள
வல்லோனை எந் நாளும்
வாஞ்சையுடன் வேண்டுகின்றோம்
சின்னப் பாலமுனையில்
சீர் கல்வி நம் கூடம்
செழிப்போடு ஜெயம் பெறவே
சீர் செய்வாய் றஹ்மானே
கையேந்திக்கேட்குகின்றோம்
கருணை மிகு இறையோனே
எந் நாளும் எம் கல்வி
ஏற்றம் பெற நீ அருள்வாய்







