
முற்றிலும் மீன்பிடித் தொழிலையே தமது சீவனோபாயமாக நம்பி, படிப்பறிவின்றியும் கல்வியின் தூர சிந்தனையின்றியும் வாழ்ந்த சின்னப்பாலமுனைக் கிராம மக்கள் இப்பாடசாலையின் முலம் கல்வியறிவைப் பெறக்கூடிய சந்தர்ப்பம்; கிடைத்தது. மர்ஹ_ம் அக்பர் மாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற ஏ.ஏ. உதுமாலெவ்வை அவர்களின் அயராத முயற்சியினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் உருவாக்கத்திற்குப் பிறகு இங்குள்ள மக்களின் கல்வி பற்றிய சிந்தனை கிளர்ந்தெழுந்தது. நாம்தான் கற்கவில்லை என்றாலும் தமது பிள்ளைகள் கற்க வேண்டுமென்ற கல்வித் தாகமும் அறிவைத் தேடும் முயற்சியும் உருவானது.







