கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம், பாலமுனை

ஓய்வூ நிலை பாராட்டு விழா

சர்வதேச சிறுவர் தினம்

மாணவத் தலைவர் சின்னம் சூட்டுதல் மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு

உளநல தினம்

IMG-20240816-WA0005.jpeg
FB_IMG_1723819256072.jpeg
next arrow
previous arrow
Shadow

அல் ஹிக்மாவில் பிரமாண்டமான சர்வதேச ஆசிரியர் தின விழா – 2024

 

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாலமுனை அல் ஹிக்மா வித்யாலயத்தின் SDEC, பழைய மாணவர்கள் அமைப்பு (PPA) என்பன உள்ளிட்ட  “ஹிக்மா பாடசாலை சமூகம்” இணைந்து நடாத்திய இந்நிகழ்வு அதிபர் SA. ஜஸாஹிர் – SLPS அவர்களின் தலைமையில், பாடசாலையின் திறந்த வெளியரங்கில் மிக சிறப்பாக 2024.10.08 ஆம் திகதி இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் AL. அப்துல் மஜீத் அவர்களும் கௌரவ அதிதிகளாக ஹிக்மா வித்யாலயத்தின் ஆசிரிய பெருந்தகைகளும் கலந்து கொண்டனர்.

 

இவர்களுடன் விஷேட அழைப்பாளாராக பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் AR.றமீன் மதனி அவர்களும், விசேட அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர் IM.பாஹிம் SLPS அவர்களும், ஹிக்மா பழைய மாணவர்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களான அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய அதிபர் AG. பஸ்மில் SLEAS , பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி அதிபர் B. முஹாஜிரீன் SLPS, ஹிக்மா SDEC செயலாளர் SH. தம்ஜீத் EDO, பொறியியலாளர் MH. நெளசாத் – SDEC உறுப்பினர்,

A.முஸ்பர், மற்றும் PPA செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இப் பிரமாண்ட நிகழ்வில் அல் ஹிக்மாவின் ஆசிரிய பெருந்தகைகளுக்கு பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டு, நினைவுச் சின்னங்களும் பரிசுகளும் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது, இதே வேளை இவ்வாசிரியர்களின் மகத்தான சேவையின் பலனாக இம்முறை க.பொ.த (சா/த) பரிட்சையில் 8A, B எனும் உயரிய பெறுபேறு பெற்ற மாணவி I. இஹ்தா உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும், மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவான 06 மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் விஷேட அம்சமாகும்.