2022 இல் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அதிக திறமையை
வெளிக்காட்டிய எமது அக்/ அல் ஹிக்மா வித்தியாலய மாணவன் MH. நிப்றான் தான் பங்குபற்றிய குண்டு போடுதல் நிகழ்ச்சியில் 12. 87M தூரம் (697 புள்ளிகள்) எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டதற்காக 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரனாக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் இறுதி நாளான இன்று(09) நடைபெற்ற ’16 வயது ஆண்களுக்கான ‘4X400 அ அஞ்சல் ஓட்டம்’ போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவர் குழு முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
வாழ்த்துகள்!
இது இவ்விளையாட்டு விழாவில் எமது பாடசாலை பெற்ற 3வது தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.







