பாலமுனை அக் / அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு அரசாங்க அதிபர் விஜயம்
பாலமுனை அக் / அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி குழு (SDEC) நேரடியாக சென்று மதிப்புக்குரிய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் Mr. Chinthaka Abeywickrama அவர்களை சந்தித்து வேண்டிக் கொண்டதற்கு அமைவாக இன்று 2024.10.12 ஆம் திகதி சனிக்கிழமை மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் தலைமையிலான, மாவட்ட பிரதம பொறியியலாளர், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இவர்களுடன் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாடசாலையில் அதிபர் SA. ஜஸாஹிர் அவர்களின் தலைமையிலான SDEC உறுப்பினர்களும் PPA பிரதிநிதிகள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் அரசாங்க அதிபர் அவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் பாடசாலையின் நிலைமைகளை நேரில் அவதானித்த அரசாங்க அதிபர் அவர்கள் அத்தியாவசிய தேவையாக உள்ள வகுப்பறை கட்டட வசதிகளை செய்வது தொடர்பாக நம்பிக்கை தரும் கருத்தாடல்களை வழங்கியிருந்தார்கள்.







